விக்டோரியா அணையில் விரிசல் மற்றும் அதிர்வு காரணமாக நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் செய்திகள் பொய்யானது என இராஜாங்க அமைச்சர் ஷஷேந்திர ராஜபக்ஷ இன்று சாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டாரவின் வாய்மூலக் கேள்விக்கு சபையில் பதிலளித்த இராஜாங்க அமைச்சர், அணையில் விரிசல் ஏதும் இல்லை எனவும் அதனால் நீர் கசிவுகள் இல்லை எனவும் விசாரணைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.
