மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி கிடைக்காவிட்டால் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வேன் என அண்மையில் நாடாளுமன்றில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால் பதவி விலகப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நாம் நாடாளுமன்றத்தில் குறித்த அறிக்கையை வெளியிட்ட அன்றே திறைசேரி அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்தினோம.
அங்கு மருந்துகள் மற்றும் பிற முக்கியமான மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கு நிதி உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், நான் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என அவர் வலியுறுத்தியுள்ளார்.