Sunday, November 9, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபெண்ணொருவர் நீராடுவதை வீடியோ எடுத்த நபருக்கு விளக்கமறியல்

பெண்ணொருவர் நீராடுவதை வீடியோ எடுத்த நபருக்கு விளக்கமறியல்

பெண் ஒருவர் குளிப்பதை கையடக்கத் தொலைபேசியில் பதிவுசெய்த சந்தேகநபரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை பதில் நீதவான் அதுல குணசேகர உத்தரவிட்டுள்ளார்.

கட்டுநாயக்க பிரதேசத்தில் வாடகை அறையொன்றில் தங்கியுள்ள பண்டாரகம, மிகலேவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆடைத்தொழிற்சாலை தொழிலாளியான சந்தேக நபரை நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள மனநலம் தொடர்பான விசேட வைத்தியரிடம் ஆஜர்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்டுநாயக்க பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் முறைப்பாட்டாளரான பெண் குளிப்பதை அப்பகுதியில் உள்ள துவாரத்தின் ஊடாக சந்தேக நபர் வீடியோ எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட சந்தேக நபரின் கைப்பேசியில் வேறு பெண்கள் குளிப்பது போன்ற வீடியோக்கள் இருப்பது தெரியவந்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles