Monday, June 29, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமிருகக்காட்சிசாலை கட்டணங்களில் மாற்றம்

மிருகக்காட்சிசாலை கட்டணங்களில் மாற்றம்

தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்திற்கு சொந்தமான தெஹிவளை மிருகக்காட்சிசாலை, பின்னவலை யானைகள் சரணாலயம் மற்றும் ரிதியகம சபாரி பூங்கா ஆகியவற்றுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி அனைத்து உயிரியல் பூங்காக்களிலும் உள்ள மாமிச உண்ணி விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்கான கட்டணம் 200 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் அனகோண்டாக்களுடன் படம் எடுப்பதற்கான கட்டணம் 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரிதியகம சபாரி பூங்காவில் குளிரூட்டப்பட்ட பேருந்துகளின் கட்டணம் 150 ரூபாவாகவும்> ரிதியகம சபாரி பூங்காவில் குளிரூட்டப்படாத பேருந்துகளின் கட்டணம் 100 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles