மாக்கும்புர பல்வகை மையம் (எம்எம்சி) நேற்று அதிக எண்ணிக்கையிலான பயணிகளை பதிவு செய்ததாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மாக்கும்புர பல்வகை மையத்திற்கு அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வருகை தந்ததாகவும், தங்காலை, ஹம்பாந்தோட்டை, எல்பிட்டிய, தெனியாய, கதிர்காமம், பதுளை மற்றும் அம்பாறை போன்ற இடங்களுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை (SLTB), மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) ஆகியவை கோரிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான சொகுசு பஸ்களை வழங்குவதற்கு பெரும் அர்ப்பணிப்பை செய்துள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
