Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமருமகனின் தாக்குதலில் மாமியார் பலி - மனைவி படுகாயம்

மருமகனின் தாக்குதலில் மாமியார் பலி – மனைவி படுகாயம்

வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று மருமகனின் தாக்குதலுக்குள்ளாகி மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபரின் மனைவி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் பெரியஉலுக்குளம் பகுதியைச் சேர்ந்த டி.பி. அமராவதி (வயது 60) என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

அவரது மகளான துலிகா ரத்னசிறி (வயது 37) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் கூரிய ஆயுதத்தால் சந்தேக நபர், மனைவி மீது தாக்குதலை முன்னெடுத்துள்ளார்.

இதனை தடுக்கச் சென்ற மனைவியின் தாயார் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதனால் தலையில் பலத்த காயமடைந்த மனைவியின் தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

படுகாயமடைந்த மனைவி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலை முன்னெடுத்த நபரை அயலவர்கள் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக உலுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles