Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உலகம்வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கியதால் ஒருவர் கொலை

வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கியதால் ஒருவர் கொலை

வாட்ஸ்அப் குழுவில் இருந்து நீக்கப்பட்டதால் மூவர் ஆத்திரமடைந்து ஒருவரைக் கொன்ற சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது.

வாட்ஸ் அப் குழுவிலிருந்து குறித்த நபர்களை நீக்கியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செல்லப்பிராணிகளின் வாட்ஸ்அப் குழுவில் ஏற்பட்ட தகராறு காரணமாக நீக்கப்பட்ட சந்தேக நபர்கள் கடந்த 26 ஆம் திகதி இந்தக் கொலையைச் செய்துள்ளனர்.

இக்கொலை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த இந்திய பொலிஸார், சந்தேகநபர்கள் மூவரையும் நேற்று (02) கைது செய்துள்ளதாகவும், அவர்களுடன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, இரண்டு தோட்டாக்கள் மற்றும் ஸ்விப்ட் ரக கார் ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23, 26 மற்றும் 30 வயதுடையவர்களாவர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles