Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகைவிடப்பட்ட 30 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு

கைவிடப்பட்ட 30 குளங்களை புனரமைக்க நிதி ஒதுக்கீடு

பல தசாப்தங்களாக கைவிடப்பட்ட 30 குளங்களை இந்த வருடத்திற்குள் புனரமைக்க விவசாய அபிவிருத்தி திணைக்களம் 300 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடுச் செய்துள்ளது.

20 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்களுக்கு உதவும் குளங்களை மாத்திரம் புனரமைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி ஹம்பாந்தோட்டை, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, அனுராதபுரம், குருநாகல், புத்தளம், பதுளை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 30 கைவிடப்பட்ட குளங்களை இவ்வருடம் அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles