Thursday, April 16, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிட்டமிட்ட திகதியில் தேர்தல் நடைபெறாது!

திட்டமிட்ட திகதியில் தேர்தல் நடைபெறாது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி மார்ச் 03ஆம் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

தேர்தலை மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்துவது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (24) காலை கூடி தீர்மானம் எடுத்துள்ளது.

இதன்படி, தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டில் இல்லாத விடயங்கள் காரணமாக, மார்ச் 09ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அன்றைய தினம் நடத்த முடியாது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா அதன் உறுப்பினர்களான எஸ்.பி. திவரத்ன, எம். எம். முகமது மற்றும் கே. பி. பி. பத்திரன ஆகியோர் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles