Sunday, May 25, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு விஷமானதால் 300 ஊழியர்கள் வைத்தியசாலையில்

உணவு விஷமானதால் 300 ஊழியர்கள் வைத்தியசாலையில்

காலி – கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் உணவு விஷமானதால் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காலி கராபிட்டிய, அஹங்கம, இமதுவ, ஹபராதுவ உள்ளிட்ட வைத்தியசாலைகளில் குறித்த குழுவினர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹபராதுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் ஆடைத்தொழிற்சாலையில் நேற்று (02) பிற்பகல் இடம்பெற்ற விருந்தின் போது உணவை உட்கொண்ட 300 பேர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிகழ்விற்கு தனியார் அமைப்பினால் உணவு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எவ்வாறாயினும், வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களை மீறிய ஆடைத் தொழிற்சாலை மற்றும் கேட்டரிங் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles