Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து

அஞ்சல் ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து

சேவையை தடையின்றி பேணுவதற்காக அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவையாளர்கள் நேற்று பிற்பகல் 4 மணிமுதல் முதல் அடையாள பணிப்புறக்கணிப்பினை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த பணிப்புறக்கணிப்பானது இன்று நள்ளிரவு 12 மணி வரையில் முன்னெடுக்கப்படும் என ஒன்றிணைந்த அஞ்சல் தொழிற்சங்க முன்னணியின் இணை இணைப்பாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.

அஞ்சல் சேவையினை தனியார் மயப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றமை, தனியார் ஊடாக அஞ்சல் விநியோக சேவையினை முன்னெடுப்பதற்கு எடுத்துள்ள தீர்மானம் மற்றும் சேவையாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றமை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles