தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று நாட்டை கட்டியெழுப்புவதில் இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு றோயல் கல்லூரியில் நேற்று (11) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நாடு பொருளாதார ரீதியிலும் அரசியல் ரீதியிலும் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும் இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்பவே நாட்டைக் கையகப்படுத்த முன்வந்ததாக ஜனாதிபதி தெரிவித்தார்.
