Saturday, June 27, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுO/L மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இணையும் IT

O/L மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இணையும் IT

அனைத்து மாணவர்களும், உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் வேலைச் சந்தையின் தற்போதைய தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் அடுத்த ஆண்டு முதல் G.C.E (O.L.) மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்ப பாடம் கட்டாயமாக்கப்படவுள்ளது .

இதற்காக பாடத்திட்டம் விரைவில் திருத்தம் செய்யப்படும்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் 1,000 அரச பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படும்.

அடுத்த வருடத்திற்கு சுமார் 1,000 மில்லியன் ரூபா இந்த நோக்கத்திற்காக அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பம் தொடர்பான பாடங்களில் திறமையான 15,000 ஆசிரியர்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொலைதூரப் பாடசாலைகளின் சேவைக்காக நியமிக்கப்படுவார்கள்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles