Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டு2023 பாதீடு: விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

2023 பாதீடு: விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் திங்கட்கிழமை நிதியமைச்சர் ஆற்றவுள்ள 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட உரை தொடர்பில் கடந்த வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் அமுல்படுத்தப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.

அதன்படி, இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் அலமாரிகள் உட்பட முழு நாடாளுமன்ற கட்டிடமும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.

எதிர்வரும் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் போது, ​​இராஜதந்திரிகளுக்கு மாத்திரமே காட்சியகங்கள் மட்டுப்படுத்தப்படும்.

இந்த நாளில் உறுப்பினர்களின் வாகன நிறுத்துமிடம் மூடப்பட்டிருக்கும் என்பதால், உறுப்பினர்களின் வாகனங்கள் சம்பந்தப்பட்ட வாகன நிறுத்துமிடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

மேலும், அன்றைய தினம் அப்பகுதியில் உள்ள போக்குவரத்து பொலிஸார் மற்றும் அருகில் உள்ள பொலிஸ் நிலையங்கள் மூலம் விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

மேற்படி விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் அன்புடன் எதிர்பார்க்கிறோம் எனவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles