Thursday, June 25, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவர்களுக்கான பகலுணவு திட்டத்தை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை

மாணவர்களுக்கான பகலுணவு திட்டத்தை இருமடங்காக அதிகரிக்க நடவடிக்கை

பாடசாலை மாணவர்களுக்கு வழமை போன்று தேவையான அளவு உணவு தற்போது கிடைப்பதில்லை என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.

அத்துடன், 11 இலட்சம் மாணவர்களுக்கு பகல் உணவை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

தற்போதும் சில பகுதியிலுள்ள மாணவர்களுக்கு பகலுணவு வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர், மாணவர்களுக்கு பகலுணவு வழங்குவதற்காக நிதியம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் பகலுணவு திட்டத்திற்காக அமைக்கப்படுகின்ற நிதியத்தின் ஊடாக உணவு வழங்கும் நடவடிக்கையை இரு மடங்காக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles