உலகெங்கிலும் உள்ள 20 நாடுகளில் ஹெபடைடிஸ் நோயால் சிறுவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சிறுவர்களிடையில் இந்த நோய் மீண்டும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்துள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை 300 ஆக பதிவாகியுள்ளதுடன், தென்கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வருகிறது.
கொவிட் பரவல் ஆரம்பமானதில் இருந்து சிறுவர்களிடையில் குறித்த நோய் பரவி வருகிறது.
மே முதல் வாரத்தில் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மேற்கு பசுபிக் நாடுகளில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
எனினும், தற்போதைய சூழ்நிலையில் ஹெபடைடிஸ் உலகம் முழுவதும் பரவும் அபாயம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.