2024 இல் கண்டி அதிவேக நெடுஞ்சாலையை நிறைவு செய்ய ஜனாதிபதி பணிப்பு
March 1, 2022 - 11:28amஉள்நாடு90 வீதமான காணி சுவீகரிப்பு நிறைவு
கண்டிக்கான அதிவேக நெடுஞ்சாலைகளின் நிர்மாணப் பணிகள் 2024ஆம் ஆண்டு நிறைவடையும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
னந்தாராம விகாராதிபதி தெனிகே சிறினிவாச ஆனந்த தேரருக்கு தர்மகீர்த்தி கௌரவ நாமத்துடன் சன்னஸ்கோரள மகாதிசா உபபிரதான பீடாதிபதியாக நியமிக்கும் நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
2014நவம்பரில் குருநாகல் தம்புள்ளை கலகெதரவில் அதிவேக நெடுஞ்சாலைக்கான அடிக்கல்லை 5ஆவது நிறைவேற்று ஜனாதிபதி நாட்டினார் .
இதற்கான அனைத்து ஒப்பந்தங்களையும் வழங்கியதுடன் அவர் தோல்வியடைந்ததையடுத்துவுன் அவை ரத்துச் செய்யப்பட்டன. அதை ரத்து செய்யாமல் இருந்திருந்தால் 2018இல் கடந்த அரசினாலேயே இதனை திறந்து வைத்திருக்க முடியும். ஆனால் அவர்கள் பழிவாங்கல் செய்ததால் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. 2017ஆம் ஆண்டு கடவத்தை முதல் மீரிகம வரையும் மீரிகமவில் இருந்து குருநாகல் வரையும் 1, 2என இரண்டு பிரிவுகளை கடந்த அரசு ஆரம்பித்தது.
2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்களில் கடவத்தையில் இருந்து மீரிகம வரையான நிர்மாணப் பணிகளை முதலாவதாக வழங்கியது.
எமது அரசு ஆட்சிக்கு ராஜபக்ஷ 2019ஆம் ஆண்டளவில் 36பில்லியன் ரூபாவை 60நாட்களுக்குள் வழங்கினார். என்னால் முடிந்தவரை விரைவாக இதைச் செய்ய நான் கடுமையாக உழைக்கிறேன்.
இந்த நெடுஞ்சாலை விவகாரம் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் குறிப்பிட்ட நாளில் நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனால் 40கி.மீ., தூரத்தை நிறைவு செய்து அதனை திறக்க முடிந்தது. பிரதமரின் தலைமையில் பொதுஹெர தொடக்கம் ரம்புக்கனை வரை நெடுஞ்சாலைத் திணைக்களத்தின் ஊடாக நேரடி ஒப்பந்தங்களை வழங்கி பணிகளை ஆரம்பித்தோம். இப்போது பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. கோடிக்கணக்கில் திருடுவதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது. மீதி இருபது கிலோமீட்டர்களை நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம். இன்னும் இரண்டு வாரங்களில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என நம்புகிறேன்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் கண்டிக்கான நெடுஞ்சாலைகள் நிர்மாணப் பணிகள் 2024ஆம் ஆண்டளவில் பூர்த்தி செய்யப்பட வேண்டும். கண்டிப்பாக இதை செய்து முடிப்போம். நிச்சயமாக நாங்கள் அதை செய்வோம். கோவிட் கோவிட் என்று கூறி நாங்கள் எந்த அபிவிருத்தி செயல்பாடுகளை நிறுத்தவில்லை
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதியின் உத்தரவின்படி, இந்த அதிவேகப் பாதையை நிறைவு செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். தொண்ணூறு சதவீத காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் பத்து சதவீதம் செலுத்த வேண்டியுள்ளது. அதுவும் விரைவில் முடிவடையும் என்றார்.
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare
ரஷ்ய, பெலாருஸ் விளையாட்டு வீரர்களுக்கு தடை விதிக்குமாறு பரிந்துரை
March 1, 2022 - 11:28amவிளையாட்டுரஷ்யா மற்றும் பெலாருஸ் நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கு தடைவிதிக்குமாறு சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் விளையாட்டு ஏற்பாட்டாளர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தீவிர இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், சர்வதேச நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.
அந்த வகையில், சர்வதேச ஒலிம்பிக் குழுவும் ரஷ்யா மற்றும் உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக நிற்கும் பெலாருஸ் ஆகிய நாடுகள் மீது நடவடிக்கைளை எடுத்துள்ளது.
ரஷ்யா மற்றும் பெலாருஸ் நாட்டுப் பிரதிநிகளாக அந்நாட்டு விளையாட்டு வீரர்களோ, விளையாடு அதிகாரிகளோ பங்கேற்பதை அனுமதிக்கக் கூடாது என சர்வதேச ஒலிம்பிக் குழு பரிந்துரைத்துள்ளதுடன், ரஷ்யா அல்லது பெலாருஸ் நாட்டைச் சேர்ந்த தனி நபரோ அல்லது அணியோ அவர்களை நாடற்ற வீரர் அல்லது நாடற்ற அணியாக பங்குபற்றும் நிலையில் அவர்களை இணைக்க அனுமதிப்பதுடன், அந்நாடுகளின் தேசிய சின்னமோ, நிறமோ, கொடியோ அல்லது கீதமோ காட்சிப்படுத்தக் கூடாது என அக்குழு தமது பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்பான செய்திகள்: 11,463 ரஷ்யர்கள், 3,993 உக்ரைனியர்களின் வீசா கட்டணமின்றி நீடிப்புleadTags: சர்வதேச ஒலிம்பிக் குழுரஷ்யாஉக்ரைன்உக்ரைன் மோதல்பெலாருஸ்தடைInternational Olympic CommitteeRussiaUkraine CrisisUkraineBelarusBanSend Push Notification: NoShare
கடற்றொழிலாளர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு
March 1, 2022 - 6:00amஉள்நாடுஜனாதிபதி அக்கறையாக உள்ளதாக டக்ளஸ் தெரிவிப்பு
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலையேற்றங்கள் காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தேசிய கடற்றொழிலாளர் மகா சம்மேளனத்தின் பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் நெருக்கடியினாலும், சட்ட விரோத மீன்பிடி நடவடிக்கைகளாலும் மீனவர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நாட்டில் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிகளினால் கடற்றொழில் செயற்பாடுகள் பாதிப்படையக் கூடாது என்பதில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கவனமாக உள்ளார்.
இந்த நெருக்கடிகளில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் வகையில் அமைச்சரவை பத்திரத்தினை சமர்ப்பித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare
நான்காவது டோஸ் குறித்து இன்னமும் தீர்மானமில்லை
March 1, 2022 - 6:00amஉள்நாடுமூன்றாவது டோஸ் நோய் எதிர்ப்பை வலுப்படுத்தும்
இலங்கையர்களுக்கு நான்காவது டோஸை கொள்வனவு செய்யவோ அல்லது வழங்கவோ அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை. ஆனால் 3 ஆவது டோஸ் மூலம் அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் செயல்முறை விரைவுபடும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
பூஸ்டர் டோஸிற்கான கொள்முதல் உத்தரவை வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கிறதா என வினவிய போது, அதிக ஆபத்துள்ள குழுவின் கீழ்வரும் அனைத்து இலங்கையர்களுக்கும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடுவதே அரசாங்கத்தின் இப்போதைய இலக்கு என்றும் அவர் குறிப்பிட்டார். தொற்று நோயினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதையும் மரணமடைவதையும் தடுக்கும் ஒரே வழி இலங்கையர்களிடையே பூஸ்டர் டோஸ் அல்லது 3ஆவது டோஸ் கொண்ட மெதுவான முன்னேற்றம் என்றும் அவர் தெரிவித்தார்.
முதல் டோஸ் கொடுக்கப்பட்ட 168,96,733 பேரில் 71,39,133 கொவிட் 19 நோயாளிகளுக்கு மாத்திரமே பூஸ்டர் டோஸ் மூலம் தடுப்பூசி வழங்கப்பட்டது. அது திருப்திகரமாக இல்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் தொற்றாத மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பயங்கரமான வைரஸ் தொற்றுக்கு எதிராக தங்கள் அமைப்பை அமைக்க 3 வது டோஸ் அவசியம் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) இன்னும் நான்காவது டோஸை பரிந்துரைக்க உள்ள போதிலும், புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு அல்லது நீரிழிவு போன்ற நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இஸ்ரேல், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா வழங்க ஒப்புக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். “30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களும் சரியான நேரத்தில் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது டோஸ்களைப் பெற்றால், எதிர்வரும் மாதங்களில் இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் என் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare
விசேட ஜனாதிபதி விசாரணை ஆ.கு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்
March 1, 2022 - 6:00amஉள்நாடுராஜித, பொன்சேகா, ரஞ்சனிடம் நேற்று வாக்குமூலம் பதிவு
விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் நேற்று முதல் ஆரம்பித்துள்ளன. கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் இரண்டாவது மாடியில் மேற்படி அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் நேற்று முற்பகல் முதல் ஆரம்பமாகின.
நேற்றைய தினம் சாட்சியங்களை வழங்குவதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன, பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் நேற்றைய தினம் சாட்சியங்களை வழங்கியிருந்தனர்.
அதை வேளை தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவும் சிறைச்சாலை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மேற்படி ஆணைக்குழுவிற்கு நேற்று அழைத்து வரப்பட்டிருந்தார்.
அதேவேளை முன்னாள் பொலிஸ் மா அதிபர்களான பூஜித்த ஜயசுந்தர, மற்றும் என்.கே. இலங்கக்கோன் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோரும் நேற்றைய தினம் மேற்படி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
ஊழலுக்கு எதிரான குழு மற்றும் அதன் செயலகம் மூலம் மேற்கொள்ளப்படும் விடயங்கள் தொடர்பில் விசாரணை செய்து தகவல்களை பெற்றுக்கொண்டு அறிக்கை சமர்ப்பித்தல் மற்றும் பொருத்தமான பரிந்துரைகளை முன் வைப்பதற்காக ஜனாதிபதியினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகளான தம்மிக்க ஜயவர்தன,ஹேமா குமுதினி விக்ரமசிங்க, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் ஆகியோர் இந்த ஆணைக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.(ஸ)
லோரன்ஸ் செல்வநாயகம்
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare
எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை
March 1, 2022 - 6:00amஉள்நாடுகொள்வனவு செய்யவுள்ள எரிபொருள் குறித்த திகதியில் நாட்டை வந்தடையும்
வழமையை விட அதிகளவு எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுள்ள நிலையிலும் நாடு முழுவதும் எரிபொருளுக்கான வாகன வரிசையை காண முடிவதாக வலு சக்தி அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சாமிந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி மாதத்தில் ஐ.ஓ.சி. நிறுவனம் இரு தடவைகள் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ள நிலையில் எரிபொருள் பாவனையாளர்கள் பெற்றோலிய கூட்டுத்தாபன எரிபொருள் நிலையங்களுக்கு அணி திரள்வது அதிகரித்துள்ளது.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் மற்றும் அதற்கான விலையதிகரிப்பு மேற்கொள்ளப்படலாம் போன்ற விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் எரிபொருள் பாவனையாளர்கள் தமது வாகனங்களின் எரிபொருள் தாங்கியை நிரப்பிக் கொள்வதில் மும்முரமாக செயற்படுவதாலேயே நீண்ட வரிசையை காண முடிகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் சிலர் எரிபொருளை களஞ்சியப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோர் இது அறுவடைக் காலம் என்பதால் இயந்திர உபகரணங்களுக்காக பெருமளவில் எரிபொருளை உபயோகிப்பதும் இதற்கு ஒரு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொள்வனவு செய்யப்படவுள்ள எரிபொருள் எந்தவித தாமதமும் இன்றி குறித்த திகதியில் நாட்டை வந்தடையும் என குறிப்பிட்டுள்ள அவர். அதற்காக செலுத்தவேண்டிய டொலர்களை விடுவித்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க பொது போக்குவரத்து களுக்காக எரிபொருளை வழங்குவதில் எந்த சிக்கல்களும் கிடையாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அரசாங்கத்திடம் தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நேற்றும் பல இடங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வாகனங்கள் வரிசையில் நின்றதாக அறிய வருகிறது. இதனால் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் குழப்ப நிலை ஏற்பட்டது. மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையிலே எரிபொருள் விநியோகிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare
அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க வேண்டும்
March 1, 2022 - 9:24amஉள்நாடுஅங்கஜன் ராமநாதன் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தி
மகா சிவராத்திரி நன் நாளில் உலகில் சமாதானம் மலர்ந்து உலக மக்கள் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க ஈஸ்வரன் அருள் புரிய வேண்டும் என குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன் வௌியிட்டுள்ள மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்துக்கள் அனுஷ்டிக்கும் மகத்தான நன்நாளான மகா சிவராத்திரி தினத்தன்று உலகில் சமாதானம் மலர்ந்து நல்லிணக்கம் ஏற்பட வேண்டுகிறேன்.
அறிந்தோ- அறியாமலோ செய்த பாவங்களுக்கு விமோசனம் பெற ஈசனுக்கே உரித்தான மகா சிவராத்திரி விரதத்தை இந்துமக்கள் அனுஷ்டித்தால் வாழ்வில் சகல செளபாக்கியங்களையும் பெற்று மகிழ்வான வாழ்வு வாழலாம் என்பது புராணங்கள் ஊடாக நாம் அறிந்த உண்மை.
“நமசிவாய” எனும் ஈசனின் மந்திரம் மனதில் உள்ள தீய எண்ணங்களைப் போக்கி மனிதனை நல்வழிப்படுத்த வல்லது. இந்த நாளில் நமசிவாய எனும் மந்திரத்தை உச்சரித்து ஒவ்வொருவரும் பிறவிப்பயனை அடைய வேண்டும்.
இந்த உலகில் பிறந்த அனைவருமே பிறப்பால் சமமானவர்கள். சாதி, மத, இன, நிற வெறுபாடுகள் எமக்குள் நாமே வகுத்தவை. இறைவன் அந்த பாகுபாட்டை ஒருபோதும் வகுக்கவில்லை. மதத்தாலோ- இனத்தாலோ உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. மத விழுமியங்களைப் பின்பற்றி உள்ளத்தால் உயர்ந்தவர்களே உண்மையான மனிதர்கள். அவர்களையே இந்த உலகம் போற்றும். சிவனுக்குரிய சிறப்பான நாளான மகா சிவராத்திரி நன் நாளில் உலகில் சமாதானம் மலர்ந்து உலக மக்கள் அனைவருக்கும் சுபீட்சமான வாழ்வு கிடைக்க ஈஸ்வரன் அருள் புரிய வேண்டும் என வேண்டுகிறேன்.
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare
மேல் மாகாணத்தில் 1,188 பேர் தற்காலிகமாக தங்கியிருப்பு
March 1, 2022 - 9:04amஉள்நாடுதகவல்களை சேகரிக்கும் பணியில் பொலிஸார்
மேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 123கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் தற்காலிகமாக தங்கியுள்ள 11,188பேரின் தகவல்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.
நாட்டின் பல பாகங்களில் இருந்தும் மேல் மாகாணத்திற்கு வந்து தங்கியுள்ள தற்காலிக குடியிருப்பாளர்களில் 20 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதனை தொடர்ந்து மாகாணத்தில் உள்ள ஏனைய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் இந்தத் தகவல் சேகரிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare
இரு மாதங்களில் வீதி விபத்துகளில் 457 பேர் உயிரிழப்பு!
March 1, 2022 - 10:26amஉள்நாடுஇவ்வருடத்தின் இரண்டு மாதக் காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 450க்கும் அதிகமானோர் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடு பூராகவும் 434வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதில் 457 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare
கார்லிங் கிண்ணம்: ஒன்பதாவது முறையாக சம்பியனானது லிவர்பூல் அணி
March 1, 2022 - 9:26amவிளையாட்டுகால்பந்து கூட்டிணைவுக் கிண்ணத் (கார்லிங் கிண்ணம் - லீக் கிண்ணம்) தொடரின் இறுதிப் போட்டியில், லிவர்பூல் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.இந்த சம்பியன் பட்டத்தின் மூலம் கார்லிங் கிண்ணத் தொடரில் ஒன்பதாவது முறையாக லிவர்பூல் அணி சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
இதுவே இத்தொடரில் அதிகபட்ச சம்பியன் பட்டம் வென்ற ஒரு அணியின் சாதனையாகும்.
வெம்ப்ளி விளையாட்டரங்களில் நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இறுதிப் போட்டியில், லிவர்பூல் அணியும் செல்சியா அணியும் மோதின.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 11–10 என்ற பெனால்டி ஷூட்-அவுட் முறையில் லிவர்பூல் அணி வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை வென்றது.
இதற்கு முன்னதாக, 1980-81, 1981-82, 1982-83, 1983-84, 1994–95, 2000-01, 2002–03, 2011–12ஆம் ஆண்டுகளில் சம்பியன் பட்டம் வென்றுள்ளது.
1977-78, 1986-87, 2004-05, 2015-16ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடத்தை பிடித்தது.
Tags: பத்திரிகை செய்திSend Push Notification: NoShare
Popular
