தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மலர்ச்சாலை உரிமையாளர்களும் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.
இறுதிக்கிரியைகள், அத்தியாவசிய சேவைகளாகக் கருதப்படாமையால், இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மரண சடங்குகளுக்கான பணிப்பாளர்கள் சங்கத்தின் ஸ்தாபகர் கவிந்து பனாகொட தெரிவித்தார்.
இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை தீர்வு கிட்டவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
வரிசைகளில் காத்திருந்தாலும், போதுமான அளவு எரிபொருள் கிடைப்பதில்லை. இந்நிலை தொடருமானால், எதிர்வரும் நாட்களில் வீடுகளிலும் வைத்தியசாலைகளிலும் சடலங்கள் நிரம்பிக் கிடக்கக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
