Tuesday, June 30, 2026
30.6 C
Colombo
அரசியல்பெனடோல் கூட வழங்க முடியாத அரசு எதற்கு?

பெனடோல் கூட வழங்க முடியாத அரசு எதற்கு?

அரசாங்கம் விவசாயத்துக்காக உரத்தை வழங்குவதாக உறுதியளித்தாலும், சிறுபோகக் காலம் முடிவடைந்து விட்டது.

எனவே இந்த உரத்தை அரசாங்கம் தந்தாலும், அது பெரும்போக காலத்திலேயே வழங்கக்கூடியதாக இருக்கும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நாட்டில் இன்று வரிசையில் இருந்து இறக்கும் பொதுமக்கள் இறப்பது, இயற்கையானது அல்ல. கொலையாகும் என்றும் ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பெனடொல் மருந்துக் கூட இல்லையென்றால், அரசாங்கம் ஒன்று எதற்காக நாட்டில் இருக்கவேண்டும்? சுகாதார அமைச்சர் எதற்காக என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எனினும் நாடாளுமன்றில் வந்து விளையாட்டுக்காட்டிக்கொண்டிருக்கிறார் என்றும் ஹேரத் குற்றம் சுமத்தினார்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles