Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் வழங்க முன்பணத்தை எதிர்பார்க்கும் இந்தியா?

எரிபொருள் வழங்க முன்பணத்தை எதிர்பார்க்கும் இந்தியா?

கடன் உடன்படிக்கைகள் தீர்ந்துவிட்டதால், இலங்கைக்கு எரிபொருளை வழங்குவதற்காக இந்தியா முன்கூட்டியே பணத்தை பெற்றுகொள்ள எதிர்பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

இலங்கையில் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள டொலர்கள் இல்லாத நிலையில், கடனில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

உணவு, மருந்துகள் மற்றும் எரிபொருளுக்காக கடந்த சில மாதங்களில் இந்தியா ஏற்கனவே 3.5 பில்லியன் டொலர் கடன் எல்லைகளை இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கியுள்ளது.

இந்தநிலையில்,எரிபொருள் கொள்வனவுக்கான 500 மில்லியன் டொலர் கடன் எல்லை வசதி இந்தியாவிடம் இருந்து புதிய அனுமதியை இலங்கை எதிர்பார்க்கிறது.

எனினும் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் உடனடியாக கருத்து எதனையும் தெரிவிக்கவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles