இலங்கை அரசாங்கத்திற்கான மக்களின் ஆதரவு 3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஜனவரியில் பத்துவீதமாக காணப்பட்ட மக்களின் ஆதரவு ஜூன் மாதத்தில் இந்த நிலையை அடைந்துள்ளது.
கொழும்பை தளமாக கொண்ட வெரிட்டே ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் மூலம் இது தெரியவந்துள்ளது
தற்போதைய அரசாங்கம் செயற்படுகின்ற விதத்தினை நீங்கள் அங்கீகரிக்கின்றீர்களா நிராகரிக்கின்றீர்களா என மக்களிடம் கேட்கப்பட்டது.
மக்களின் பொருளாதார நம்பிக்கை -96 வீதமாக காணப்படுவதோடு, ஜனவரியில் இது – 83 வீதமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.