போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுவரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன், அங்கிருந்து 500க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தப்பி ஓடியவர்களை தேடி, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.