நாட்டை இரண்டு வாரங்களுக்கு முடக்கும் வகையிலான திட்டம் ஒன்று குறித்து ஆராயப்படுவதாக உள்ளக தகவல்கள் தெரிவித்துள்ளன.
தற்போதைய நிலைமைக்கு மத்தியில், அடுத்த திங்கட்கிழமை முதல் ஓரிரு வாரங்களுக்கு, அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளை இணையத்தள முறையில் இயக்குவது குறித்து அரசாங்கம் அவதானம் செலுத்துவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் ஊரடங்கு சட்டம் எதுவும் விதிக்காமல், இதனை நடைமுறைப்படுத்த ஆராயப்படுகிறது.
எரிபொருள் பற்றாக்குறையால் இந்த திட்டம் குறித்து ஆராயப்படுகிறது.
இது குறித்து இன்று (17) இடம்பெறவுள்ள விசேட கூட்டத்தில் முடிவெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.