கொழும்பு – முகத்துவாரம் – ரெட்பானாவத்தை பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
அவர் போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை 5 மணியளவில் முச்சக்கரவண்டியில் வந்த இருவரால் இவ்வாறு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
சம்பவத்தில் கொழும்பு – அளுத்மாவத்தை பகுதியை சேர்ந்த 24 வயதான இளைஞர் ஒருவர் பலியானார்.
இவ்வாறான பின்னணியில் கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.