லிட்ரோ எரிவாயு விலை அதிகரிக்கவுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது அமுலில் உள்ள விலை அதிகரிக்கும் எண்ணமில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
அத்துடன், இன்று லிட்ரோ எரிவாயு விநியோகம் இல்லை எனவும், இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட எரிவாயு கொள்கலன்கள் நாளை முதல் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
தற்போது 12.5 கிலோ லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களுக்கு இடையேயான விலை வித்தியாசம் 1990 ரூபாவாகும்.
