இந்தியா – தெலுங்கானா மாநிலத்தில், இணைய வழியில் கைப்பேசி ஒன்றை கொள்வனவு செய்த நபருக்கு 5 ரூபா மதிப்பான (இந்திய நாணய மதிப்பு) சலவை சவர்க்காரம் கிடைத்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்த மோசடி குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிலாபாத் மாவட்டம் ஊட்டனூரை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த 5 நாட்களுக்கு முன் பொருட்களை விற்பனை செய்யும் தளமொன்றில் 6,100 ரூபா செலுத்தி கைப்பேசி ஒன்றை ஒர்டர் செய்துள்ளார்.
அவருக்கு கிடைத்த பொதியை திறந்து பார்த்த போது, அதில் கைப்பேசிக்கு பதிலாக சலவை சவர்க்காரம் இருந்துள்ளது.
இதுகுறித்து குறித்த நிறுவனத்துக்கு புகார் அளித்தும், அந்நிறுவனம் பதிலளிக்க மறுத்த நிலையில், பாதிக்கப்பட்ட நபர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
