பேருந்துகளை இயக்குவதற்கு டீசல் கிடைக்காத காரணத்தினால் இன்று நாட்டில் 6000 பேருந்துகளே சேவையில் ஈடுபடுகிறது.
இதனை இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களை பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு எம்மால் இயன்ற உதவியை செய்து வருகிறோம். எனினும் இது டீசல் கையிருப்பில் உள்ள வரை மட்டுமே தொடரும்.
டீசல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், அடுத்த சில நாட்களில் ஒரு தனியார் பேருந்து கூட இயங்காது என அவர் மேலும் தெரிவித்தார்.
