Sunday, May 17, 2026
25.6 C
Colombo
செய்திகள்உலகம்நைஜீரியா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 50 பேர் பலி

நைஜீரியா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: 50 பேர் பலி

நைஜீரியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் இனந்தெரியாத கும்பலொன்று நேற்று புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தியது.

இந்த தாக்குதலில் 50 போ் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நைஜீரியாவின் ஓண்டோ மாகாணத்தில் உள்ள ஓவோ நகரில் இருக்கும் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை பிராா்த்தனைக்காக ஏரளமானோா் நேற்று கூடியிருந்தனா்.

அங்கு துப்பாக்கிகளுடன் நுழைந்த கும்பலொன்று, அங்கு இருந்தவா்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.

வெடிகுண்டுகளையும் வீசி விட்டு அக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

இந்த சம்பவத்தில் சிறுவா்கள் பலர் உட்பட 50 போ் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles