மோட்டார் சைக்கிளில் ஐஸ் போதைப்பொருளை கடத்திய ரயில் நிலைய அதிபர் மற்றும் ரயில் உதவியாளர் ஒருவரை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவர்கள் இருவரிடமிருந்தும் 20 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 250 கிராம் 320 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அவர்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள் 29 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
