டெங்கு அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நேற்று (02) முதல் மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இந்த விசேட டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையினால் டெங்கு பரவும் அபாயம் காணப்படுவதாகவும், எனவே இராணுவம், சுற்றாடல் பொலிஸ் பிரிவு மற்றும் சுகாதார குழுக்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 17 டெங்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளதுடன், 30 ஆயிரத்து 642 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.