Wednesday, April 22, 2026
25.6 C
Colombo
செய்திகள்விளையாட்டுஉலக சாதனை படைத்த சமித துலான் கொடித்துவக்கு

உலக சாதனை படைத்த சமித துலான் கொடித்துவக்கு

பாரிஸில் இடம்பெற்றுவரும் பரா ஒலிம்பிக் தொடரில் நேற்று (02) நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (F64) போட்டியில் சமித துலான் கொடித்துவக்கு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

67.03 மீற்றர் தூரம் ஈட்டி எறிந்து தனது தனிப்பட்ட சிறந்த தூரத்துடன், துலான் F44 பிரிவில் தனது முந்தைய உலக சாதனையை (66.49 m) முறியடித்துள்ளார்.

குறித்த பிரிவில் இந்தியாவின் சுமித் ஆன்டில் 70.59 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றதுடன், அவுஸ்திரேலியாவின் மிட்செல் புரான் 64.89 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்து வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.

அத்துடன் இது பாராலிம்பிக் போட்டிகளில் சமித துலான் கொடித்துவக்கு பெறும் இரண்டாவது பதக்கமாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles