Friday, February 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரசியல் ஆதரவில் நியமிக்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளை பதவி நீக்குமாறு பணிப்புரை

அரசியல் ஆதரவில் நியமிக்கப்பட்ட பொலிஸ் பொறுப்பதிகாரிகளை பதவி நீக்குமாறு பணிப்புரை

அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரி பதவிகளுக்கு மீண்டும் விண்ணப்பங்களை பெற்று தகுதியான அதிகாரிகளை நியமிக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், பொலிஸ் மா அதிபருக்கு இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

அரசியல் ஆதரவில் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டவர்களை உடனடியாக பதவி நீக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அப்பதவிகளுக்கான விண்ணப்பங்களை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுக்கொள்ளுமாறும் அவற்றில் மிகவும் திறமையான பொலிஸ் அதிகாரிகளை தெரிவு செய்து, அது சம்பந்தமான அறிக்கையை தனக்கு வழங்குமாறும் அமைச்சர், பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles