Tuesday, June 23, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதீக்கிரையான வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் முன் இதை செய்க

தீக்கிரையான வீடுகளுக்கு இழப்பீடு வழங்கும் முன் இதை செய்க

அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களின் போது சேதமடைந்த வீடுகள், கட்டிடங்கள் மற்றும் சொத்துகளுக்கான இழப்பீடுகளை வழங்குவதற்கு அவை எவ்வாறு வாங்கப்பட்டது என்பது தொடர்பில் உரிமையாளர்கள் விளக்கமளிக்க வேண்டும் என நிதி ஆலோசகர் பிரசாந்த அபேகோன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா அறக்கட்டளை நிறுவனத்தில் நேற்று (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விசேடமாக வருமான வரி கணக்குள், வரவு செலவு அறிக்கைகள், வர்த்தகத்தில் ஈடுபட்டால் அவற்றின் வருடாந்த கணக்குகளின் அறிக்கை, காப்பீட்டு தகவல்கள் போன்றவற்றை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

தீக்கிரையான சொத்துக்களில் பெரும்பாலானவை எம்.பி.க்கள், அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்குச் சொந்தமானவை என்றும், அவர்களில் யாரேனும் வெளிப்படுத்தாத சொத்துக்கள் இருந்தால், அவற்றிற்கு இழப்பீடு வழங்குவதன் மூலம் ‘கறுப்புப் பணம்’ வெளிவர வாய்ப்பு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles