ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்குகளை செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
செப்டெம்பர் 4 ஆம் திகதி மாவட்டச் செயலர்கள் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்களில் தபால் வாக்குகளை வழங்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை வழங்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.