Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்திய மீனவர்கள் இருவரும் நாடு திரும்பினர்

இந்திய மீனவர்கள் இருவரும் நாடு திரும்பினர்

பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரக அதிகாரிகளால் நேற்று (29) நண்பகல் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

படகு கவிழ்ந்ததில் மாயமான இந்திய மீனவர்களில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டு நேற்று இராமேஸ்வரம் துறை முகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கச்சத்தீவு அருகே கடலில் படகு கவிழ்ந்ததில் மாயமான இரு மீனவா்களில் ஒருவா் 28 ஆம் திகதி மாலை சடலமாக மீட்கப்பட்டார்.

ராமேஸ்வரத்திலிருந்து கடந்த திங்கட்கிழமை (26) விசைப்படகில் 4 மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதுடன், இரு மீனவர்கள் மீட்கப்பட்டனர்.

இதன்போது மாயமான ஏனைய இரு மீனவர்களையும் தேடும் முயற்சியில் கடற்படையினர் ஈடுபட்டிருந்தனர்.

காப்பாற்றப்பட்ட இரு மீனவர்களையும் கடற்படையினர் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைத்ததுடன், நேற்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக அவர்கள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles