சுற்றுலா, கைத்தொழில், வர்த்தகம் மற்றும் துறைமுகப் பொருளாதாரமாக ஹம்பாந்தோட்டை அபிவிருத்தி செய்யப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு நிவாரணம் அளித்து வருமானத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதுவே அவருக்கும் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் உள்ள வித்தியாசம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
கஷ்டப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கு முறையான முகாமைத்துவத்துடன் முன்னோக்கி செல்ல வேண்டும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பொய்யான வாக்குறுதிகளை வழங்கும் தலைவர்களிடம் நாட்டின் பொறுப்பை ஒப்படைக்க முடியாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.