இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை ஓகஸ்ட் 16 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் ஒன்று இந்த பயணிகள் படகு சேவையை நடத்த திட்டமிட்டுள்ளதுடன், ஆன்லைன் மூலம் இருக்கை முன்பதிவு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, பயணிகளுக்கு http://sailindsri.com/ என்ற இணையதளத்துக்கு சென்று படகுச் சேவைக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும்.
இந்த பயணிகள் படகு சேவை இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் இடையே இயக்கப்பட உள்ளது.