Friday, March 14, 2025
28.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுலொறி - மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் பலி

லொறி – மோட்டார் சைக்கிள் விபத்து: இளைஞன் பலி

ஹங்வெல்ல – வனஹகொட பிரதேசத்தில் ஹைலெவல் வீதியில் இன்று (28) காலை இடம்பெற்ற லொறி மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவிசாவளை நோக்கி சென்றி லொறியின் எரிபொருள் தீர்ந்த நிலையில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த போது, ​​வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் லொறியின் பின்பகுதியில் மோதியுள்ளது.

மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஹங்வெல்ல, கிராம்புல பிரதேசத்தைச் சேர்ந்த ஜனித் பிரியதர்ஷன என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளான்.

சம்பவம் தொடர்பில் லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles