இருதரப்பு கடன் வழங்குவோரின் உத்தியோகபூர்வ குழுவுடன் 5.8 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் மறுசீரமைப்பு இணக்கத்தை இலங்கை எட்டியுள்ளது.
பாரிஸில் இன்று (26) நடைபெற்ற ஒன்று கூடலின் போதே இந்த இலக்கை அடைய முடிந்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இந்த இறுதி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
அதிகாரப்பூர்வ கடன் வழங்கும் நாடுகளின் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் அதன் இணைத் தலைமைத்துவங்களை வகிக்கும் இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இதில் பங்கேற்றிருந்தன.