Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதப்பிச் சென்ற கைதியை தேடி வலைவீச்சு

தப்பிச் சென்ற கைதியை தேடி வலைவீச்சு

வழக்கு ஒன்றுக்காக கல்கெதர நீதிமன்ற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகளை கலகெதர பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக ஹத்தரலியத்த பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட குறித்த நபர், வழக்கு விசாரணைக்காக நேற்று (25) கலகெதர நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபரை கைது செய்வதற்காக கலகெதர மற்றும் ஹத்தரலியத்த பொலிஸ் நிலையங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles