Thursday, February 12, 2026
28.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹீனட்டியான மகேஷின் உதவியாளர் ஹெரோயினுடன் கைது

ஹீனட்டியான மகேஷின் உதவியாளர் ஹெரோயினுடன் கைது

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவருமான ‘ஹீனட்டியான மகேஷ்’ என்பவரின் உதவியாளர் ஒருவர் ஹெரோயினுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மினுவாங்கொடை பெய்லவத்தை அம்பில்லவல வீதியில் அமைந்துள்ள சில்லறை விற்பனை நிலையத்திற்கு முன்பாக நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து 02 கிராம் ஹெரோயின் மற்றும் மன்னா கத்தியொன்று கைப்பற்றப்பட்டது.

மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளின் போது, ​​ஹீனட்டியான மகேஷுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தமை தெரியவந்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles