Tuesday, April 14, 2026
30 C
Colombo
செய்திகள்உலகம்படகு கவிழ்ந்து விபத்து: 49 பேர் பலி

படகு கவிழ்ந்து விபத்து: 49 பேர் பலி

யேமன் கடற்பரப்பில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

சுமார் 250 பேருடன் பயணித்த இப்படகு, சீரற்ற காலநிலை காரணமாக கவிழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

படகில் எத்தியோப்பிய ஏதிலிகள் இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் 123ற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles