Sunday, March 15, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீரற்ற காலநிலை: பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு

சீரற்ற காலநிலை: பலியானோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரிப்பு

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக 5,587 வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

56 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 5,531 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆகவும் அதிகரித்துள்ளது. ஒருவர் காணாமல் போயுள்ள நிலையில் 16 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1,973 பாதுகாப்பான மையங்களில் 7,639 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக 63,413 குடும்பங்களைச் சேர்ந்த 239,006 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles