Sunday, December 21, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநீர் மின் உற்பத்தி இரு மடங்காக அதிகரிப்பு

நீர் மின் உற்பத்தி இரு மடங்காக அதிகரிப்பு

நாட்டின் நீர் மின் உற்பத்தி 2 மடங்காக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழை காரணமாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் பிரதான நீர்மின் உற்பத்தி நிலையங்களின் ஊடாக 15.66 கிகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இது மொத்த மின் உற்பத்தி விநியோகத்தின் 41.91 சதவீதம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நீர்மின் விநியோகம் அதிகரித்துள்ளமையினால், அனல் மின் உற்பத்தி விநியோகம் 25 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles