சீதுவ பிரதி மேயர் 10 கிராம் ஹெரொயினுடன் படல்கம பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது அவர் கைதாகியுள்ளார்.
துனகஹ விகாரைக்கு அருகில் வைத்து கைதான பிரதி மேயரிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.
குறித்த பிரதி மேயர் பல்வேறு பிரதேசங்களில் இருந்து வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.