Friday, May 2, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநடைமேடையை உடைத்து கொண்டு வந்த ரயில்

நடைமேடையை உடைத்து கொண்டு வந்த ரயில்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இன்று பிற்பகல் ரயில் விபத்து ஏற்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து சிலாபம் நோக்கி பயணிக்கவிருந்த ரயிலானது, நடைமேடையை உடைத்துக் கொண்டு நிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த விபத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

எனினும், ரயிலின் முன் பகுதியும், நடைமேடையின் ஒரு பகுதியும் விபத்தில் சேதமடைந்துள்ளன.

இதனால் ரயில் போக்குவரத்திற்கு பிரச்சினை இல்லை எனவும், இது தொடர்பாக ரயில்வே திணைக்கள அளவில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles