மன்னார் கரிசல் பகுதியில் குற்றம் செய்யத் தயாரான நபரைக் கொல்ல முயன்றதாகக் கூறப்படும் மற்றுமொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவிக்கின்றனர்.
அங்கு வாள், 03 கத்திகள் மற்றும் 500 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த மன்னார் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
குறித்த நபரை கைது செய்ய சென்ற போது தனது கடமைக்கு இடையூறு விளைவித்து கொலை செய்ய முயன்றதாக கூறப்படும் பேசாலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயது இளைஞனும் கத்தி மற்றும் கைத்தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.