லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைகள் கடந்த திங்கட்கிழமை முதல் குறைக்கப்பட்டது.
அதற்கமைய, 12.5 கிலோ எடையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 135 ரூபாவினால் குறைக்கப்பட்டு 4115 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் தற்போது 12.5 கிலோ எடையுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு 4500 ரூபாவிற்கு வர்த்தகர்கள் தான்தோன்றித்தனமாக நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றனர்.
அத்துடன் மாவட்டத்தில் குறித்த நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக பணத்தினை வர்த்தகர்கள் நுகர்வோரிடம் இருந்து பெற்றுக்கொள்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த செயற்பாட்டை நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.