Tuesday, June 23, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

மஹியங்கனை பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மஹியங்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 23 ஆம் கட்டை பகுதியில் இன்று (03) காலை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

23 ஆலஹெர பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் வீடு திரும்பும் போது வீடொன்றின் அருகிலிருந்த மின் வேலியில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles