ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் நிட்டம்புவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நிட்டம்புவ கொஹடோவிட்ட பிரதேசத்தில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவரின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 45 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதன் பின்னர் கஹடோவிட்ட பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
அவரிடமிருந்த ஐஸ் போதைப்பொருளின் பெறுமதி சுமார் 10 இலட்சம் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
கைதான நபர் கம்பஹா பிரதேசத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நிட்டம்புவ பொலிஸார் வருகின்றனர்.